பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா

340

பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மூன்றரை வருடங்கள் வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணாத்துப்பூச்சிகள் என மேடையில் குறிப்பிட்டுள்ளார்.

மாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து அரச தரப்பினர் 3000 மில்லியனை கொடுப்பதாகவும் முதலில் 1500 மில்லியனையும், வேலையை முடித்த பின்னர் எஞ்சிய 1500 மில்லியனையும் கொடுப்பதாகப் பேசப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிடுவதற்காக உதவுமாறு சரத் பொன்சேக்கா பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருடன் பேசியதாக குரல் பதிவொன்றை வழங்குமாறு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அவ்வாறான விடயமொன்றை உருவாக்கி, பாதாள உலகத் தலைவர்களுக்கு 3000 மில்லியனை வழங்கி, எம்மை சிறையில் அடைக்க முயல்கின்றனர்“ என தெரிவித்துள்ளார்.

SHARE