சபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!

93

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினரால் நேற்று(புதன்கிழமை) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்ற கொண்டமைக்கான காரணத்தை விளக்குமாறு முறைப்பாட்டில் உள்ளடக்கியுள்ளதாகவும் பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, சபாநாயகர், அரசியலமைப்பு, சம்பிரதாயம், ஒழுக்கம் என்பவற்றுக்கு எதிராகவும் பெரும்பான்மையான மக்களின் அபிலாஷைக்கு எதிராகவும் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1994, 20 இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 70 வது பந்திக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவுக்கு பக்கசார்பாக செயற்பட்டுள்ளதன் மூலம் கரு ஜயசூரிய, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றத்தை செய்துள்ளதாக திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்விப் பிரிவின் தலைவர் விரிவுரையாளர் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.

SHARE