புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி!

74

புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வாகனப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினரால் கொழும்பு – காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு இந்த வானகப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனப்பேரணி நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரை பயணிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

SHARE