சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று கூடுகின்றது சு.காவின் அகில இலங்கை செயற்குழு

75

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம வளாகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பிலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் எதிர்வரும் சில தினங்களுக்குள் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த கூட்டம் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

SHARE