ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விருப்பம் – ரணில்

91

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளித்திருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் பணியாற்றுவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேள்வியெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் த ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தின் ஆரம்பகால நினைவைப் பற்றிய தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை 16 ஆம் திகதிவரை தாமதப்படுத்தியமை மிகுந்த கவலையளிக்கின்றது. ஏனெனில் அது நாட்டை மேலும் நிலையற்றதன்மைக்கு இட்டுச்செல்லும்.

மேலும் நாடாளுமன்றில் தமக்கே பெரும்பான்மை இருக்கின்றது, அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினால்தான் அவர்கள் நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டவில்லை என கூறினார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது, இதுவே நிதர்சனம் ஏனெனில் அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பதை நான் அறிவேன் என கூறினார்.

SHARE