வடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று

146

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், அண்மையில் பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்களா இல்லையா என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE