வவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது

70
வவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது
வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் நேற்று  மாலை3.30மணியளவில்  3 பேரை ஹெரோயின் தூள் தமது உடமையில் மறைத்து வைத்திருந்தவர்களைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  நேற்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் தூள் தமது உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 700மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 29 வயதுடைய ஆண் மதகுவைத்தகுளம், மற்றைய இருவரும் 29வயது, 44வயதுடைய தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த மூவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
SHARE