பேருந்து பயண கட்டணங்கள் குறைப்பு

81

பேருந்து பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை 2 சதவீதத்தால் குறைப்பதற்கு அனைத்து பேருந்து சங்கங்களும் தங்களின் இணக்கத்தை வெளியிட்டதன் அடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பீ.ஹேமசந்ர தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சொகுசு ரக பேருந்து மற்றும் அரை சொகுசு பேருந்து பயண கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அதிவேக பாதைகளில் பயணிக்கும் பேருந்துக்களின் கட்டணங்களை சீர்த்திருத்துவது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடல்களில் ஆராயப்படுமென எம்.பீ.ஹேமசந்ர கூறியுள்ளார்.

இதேவேளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளமையாலேயே பேருந்து கட்டணமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE