ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான பிரேரணை தொடர்பில் மனோவின் முக்கிய அறிவிப்பு!

116

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் உத்தியோப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ள மனோ கணேசன், குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது.

பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியை குறைப்பதை தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்பட மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

SHARE