கோட்டாபய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி!

71

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போதே அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்து.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிதிக்குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE