ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

64

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பின் போது எதிர்கால செயற்பாடு குறித்த முக்கிய விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல கட்சிகளும் தெரிவித்து வருகின்ற நிலையில் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி அறிவித்தார்.

இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகளும் புதிய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்றும் இதனாலேயே நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் போது தமக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லை என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக உணர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது.

SHARE