இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் இக்கட்டான தருணம் – கோட்டா

103

மிகவும் இக்கட்டான நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வகிபாகத்தை மக்கள் கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவிக்கவுள்ள நிலையில், அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாட்டின் முக்கியமான சூழ்நிலையில் முற்போக்கான எதிர்காலத்திற்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்படவேண்டும். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன்.” என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

SHARE