தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசனம்!

112

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாப அரசியலுக்காக, தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொள்ள முனைவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கி.கிருஷ்ணமீனன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் பிரதிநிதிகள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

SHARE