ரஹானே, விஜய் தவிர நிறைய அரைசதங்கள்: இந்தியா ஏ 467 ரன்கள் குவிப்பு

68

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரகா மாங்கவ்னியில் நடைபெறும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா தொடருக்காக, சில வீரர்களுக்கான பயிற்சி முன்னோட்டமாக விளையாடப்பட்டு வரும் நிலையில் இந்தியா ஏ அணியில் முக்கிய வீரர்கள் விஜய், ரஹானே தவிர மற்ற வீரர்கள் அரைசதங்களை விளாசி இந்தியா ஏ அணி 467/8 என்று டிக்ளேர் செய்துள்ளது.

இதில் கேப்டன் ரஹானே 12 ரன்களிலும் முரளி விஜய் 28 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். முதல் நாள் ஆட்டத்தில் 79 நாட் அவுட் என்று இருந்த பார்த்திவ் படேல் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். விஜய் சங்கர் 96 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்களையும், கவுதம் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 73 பந்துகளில் 47 ரன்களையும் அடித்தனர், இருவரும் சேர்ந்து 89 ரன்களை அதிரடி முறையில் சேர்த்தனர்.

இந்திய அணியின் நம்பிக்கை வருங்கால நட்சத்திரம் பிரித்வி ஷா 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 88 பந்துகளில் 62 ரன்களையும் மயங்க் அகர்வால் 65 ரன்களையும் ஹனுமா விஹாரி 86 ரன்களையும் ஏற்கெனவே எட்டி அரைசதங்களை எடுத்தனர்.

தற்போது நியூசிலாந்து அணி 168/1 என்று ஆடி வருகிறது.

SHARE