எட்டு ஆண்டுகள் கடந்தும் நட்டாற்றில் கைவிடப்பட்ட தமிழ் மக்களும் ஏமாற்றிய மக்கள் பிரநிதிகளும்

1330
எட்டு ஆண்டுகள் கடந்தும்  நட்டாற்றில் கைவிடப்பட்ட தமிழ் மக்களும் ஏமாற்றிய மக்கள் பிரநிதிகளும்
கார்த்திகை 27ல் தமிழர் தாயத்திலும் உலகங்கெங்கும் தமிழர் வாழும் நாடுகளிலும் தமிழின விடுதலைக்காக களமாடி உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தும் தமிழர்களின் தேசிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.2009க்கு முன் மாவீரர் நாட்களில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வ தேசத்துக்கும் ஒரு சேதியையும் பிரகடனங்களையும் முன்வைப்பதுடன் இது எதிர்வரும் நாட்களில் செயல்களாக மாறவும் மக்களும் போராளிகளும் பாடுபடுவார்கள்.ஆனால் எட்டு ஆண்டுகளில் இந்த நாளில் தமிழர்களில் சொல்லப்பட்ட சேதிகள் என்ன அவை எவ்வாறு செயல்வடிவம் பெற்றுள்ளன என்பதை நாம் பார்க்கவேண்டியது அவசியம்.
முள்ளிவாய்க்காலை நோக்கி பெரும் போரில் மகிந்தராஜபக்ச தலைமையிலான சிங்கள பேரினவாத அரசாங்கம் பல நாடுகளையும் தனது வலையில் போட்டுக்கொண்டு இறுதியில் முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனிதப்பேரவலமான தமிழின படுகொலையை நடத்திமுடித்தது.இன்னொரு படி மேலே சென்று தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய பல்லாயிரம் மாவீரர்களின் கல்லறைகளை சிங்கள பேரினவாதம் மனித நாகரிக மற்ற முறையில் உடைத்தெறிந்து அதற்குள் உன்னதமான மாவீரர்களின் வித்துடல்களை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி வீசி எறிந்தது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பேரதிர்வை சனல் 4 உள்ளிட்ட ஊடகங்களும் சர்தேச மனிதாபிமானிகளும் புலம் பெயர்ந்துவாழும் தமிழர்களின் அமைப்புக்களும் தமிழக உணர்வாளர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரும் முயற்சியை தமது பிராந்திய சர்வதேச கேந்திர நலன் கருதி எனினும் உலகத்தின் சக்திவாய்ந்த வல்லரசுகள் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் கொண்டு வந்தனர்.
2010 தொடக்கம் 2015வரையிலான அக்காலப்பகுதி இலங்கையில் மகிந்தராஜ பச்க தலைமையிலான ஆட்சியின்போது ஐக்கிய நாடுகள் சபை தீர்மானமும் ஒரு வலுவான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தன.அதை தாயகத்தில் இருந்து மகிந்த சார்பாக சில ஒட்டுக்குழுக்களும் அரசு சார்ந்து நலன்பெறும் மக்கள் சிறுபான்மை தரப்புகளும் மகிந்த சார்பு பிரதிநிதிகளாக நின்று எதிர்த்தனர்.ஆனால் தமிழர் தரப்பு தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் நின்று மகிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தனர்.அது தமிழர்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கையொன்றை வளர்த்து வந்துள்ளது.
அதே வேளை இன்னொரு புறத்தில் நிலமீட்பு அதாவது சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கவும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கோரியும் 2010-2015வரை மகிந்த ராஜபக்சவின் அடக்கு முறை ஆட்சியில் கீழ் தாயகத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கபட அது சர்வதேச நாடுகளின் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை ஈர்ந்தது.அதே வேளை மகிந்தராஜ பக்ச நல்லிணக்க ஆணைகுழு தெரிவுக்குழு போன்றவற்றின் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றும் வித்தையையும் செய்து கொண்டு அரசியல் யாப்பில் திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம் தானே தொடர்ந்து ஜனாதிபதியாக பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து சர்வதேசத்தில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை சீனா ரஸ்யா உள்ளிட்ட நாடுகளில் ஆதரவுடன் நீத்துப்போகச்செய்யும் தந்திரத்தையும் கையாண்டு வந்த நிலையில் காலம் முடிவதற்கு முன்னதாக அவரே நடத்திய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவுடன் மைத்திரிபாலசிறீசேனா என்ற மகிந்தரப்பில் இருந்து கட்சிமாறிய ஒருவரை பொது வேட்பாளராக வைத்து எதிர்கட்சிகளும் வேறு சர்வதேச பின்னணிகளும் நடத்திய சதுரங்கத்தில் மகிந்தராஜபக்ச சற்றும் எதிர்பாராதவகையில் அரச கட்டிலில் இருந்து அகற்றப்பட்டார்.
2009ல் முள்ளிவாய்க்கால் நடந்த இறுதி யுத்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறீசேனாவும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் படுகொலைகள் பலவற்றுக்கு காரணமான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சிக்கான அமைப்பு என்ற ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் சிங்கள ராஜதந்திர தோற்றத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரிமாற்றம் என்ற வாசகத்தின் அடிப்படையில் ஆதரித்ததுடன் தமிழ் மக்களும் தமக்கு பெரும் அநீதி இழைத்த மகிந்தராஜபக்சவை பழிவாங்கவும் களத்தில் இறங்கி மகிந்தராஜ பக்சவை தோற்கடித்தனர்.இதே வேளை மகிந்தராஜ பக்சவை மீண்டு கொண்டுவருவதன் மூலம் சர்வதேச விசாரணையை வலுவாக்கலாம் என்ற பூகோள யதார்த்தத்தின் அடிப்படையில் நல்லாட்சி என்ற சிங்கள ராஜ தந்திர தோற்றத்தை தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் சில அமைப்புகளும் கட்சிகளும் எதிர்த்தன.ஆனால் தமிழர்கள் மனம் மகிந்தவை உடன் பழிவாங்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதி மகிந்தவுக்கு எதிராக தேர்தல் களத்தில் நின்றனர்.அதன் பின் நிகழ்ந்த காரியங்கள் என்ன
2015ல் மகிந்த ராஜபக்ச  தோற்ற நிலையில் பொதுத்தேர்தலில் இலங்கை ஆட்சியாளரை தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கங்கள் காலத்துக்கு காலம் ஏமாற்றிய ஏராளம் பாடங்கள் இருந்தபோதும் அதையெல்லாம் கருத்தில் எடுக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி என்ற மாயைக்கு தமது ஆதரவை எந்தவிதநிபந்தனைகளும் இன்றி எந்தவித எழுத்து மூல ஒப்பந்தங்களும் இன்றி கொடுத்து சிங்கள தரப்பில் கரைய ஆரம்பித்தனர்.அதற்கு நன்றிக்கடனாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் எதிர்கட்சித்தலைவர் பாராளுமன்றக்குழுக்களின் பிரதிதவிசாளர் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் என்ற அரசாங்க அங்கமான பதவிகளை வாரி வழங்கினார்.அது மட்டுமன்றி இலங்கை பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ரணில் தனது அமைச்சின் ஊடாக சிறப்பு ஒதுக்கீடாக ஒவ்வொருவருக்கும் கோடிகளை வாரி வழங்கினார்.எந்தவித சலனமும் இன்றி கோடிகளை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக்கோடிகளை வைத்து தமிழ் மக்களுக்கு  எலும்புகளாக வேலைவாய்ப்பு வீதிகள் பூங்காக்கள் கட்டிடங்கள் என வீசி தொடர்ந்து தங்கள்   கதிரைகளை தக்க வைக்க கனவு கண்டனர்.ஆனால் அதன் பின்னணியில் சிங்கள ராஜதந்திரம் பெற்றுக்கொள்ளப்போகின்ற பாரிய விலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னுணராத ராஜதந்திரத்தை கொண்டிருந்தது.
அதற்கான தருணமும் சிங்கள ராஜதந்திரத்துக்கு கனிந்தது.ஐக்கிய நாடுகள் சபையில் சிங்கள தேசத்தின் போர் நாயகனான மகிந்தராஜ பக்சவுக்கு எதிராக 2015 செப்ரெம்பரில் அமெரிக்கா கொண்டுவந்த போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை மழுங்கடிக்க சிங்கள ராஜதந்திர வடிவமான நல்லாட்சி திட்டத்தை வகுத்தது.ரணிலுக்கு கைதேர்ந்த அந்த தந்திரம் தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் அதுவரை தமிழின இனப்படுகொலை என்ற வலியுறுத்தி வந்த அமைப்புக்களை கட்சிகளை இருவேறு கருத்துக்களுடன் பிளவுபடவைத்தது.
ஒரு பக்கத்தில் தங்கள் மக்கள் பிரதிநிதிகளில்  நம்பிக்கையிழந்த மக்கள் நல்லாட்சி காலத்திலும் தன்னெழுச்சியாக நில மீட்பு சிறைக்கைதிகளை விடுவித்தல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு என கோரிக்கைகளை முன்வைத்து தெருவில் குந்தி இரவுபலாக நாட்கள் மாதங்களாக வருடங்களாக தொடர்போராட்டங்களை நடத்தத் தொடங்கினர்.
அந்த போராட்டங்களில் ஈடுபட்ட சிலர் நோய்வாய்ப்பட்டும் இழப்புக்களின் ஏக்கத்திலும் பிரிவின் வலியிலும் இறந்தும் போயினர்.இவ்வேளையில் சில துயிலுமில்லங்களில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறியது.வெளியேற்றத்தின் பின் கல்லறைகள் உடைக்கப்பட்ட நிலத்தில் புகுந்த அரசியல்வாதிகள் அதையும் தங்கள் அரசியல் மூலதனமாக்க முனைந்தபோது முன்னாள் மூத்த போராளிகளுக்கும் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றின.எனினும் விடுதலைப்போராட்டத்தில் தங்கள் குடும்பத்தில் இருந்து எந்த உயிரையும் கொடுக்காத அரசியல்வாதிகள் தம்மிடமுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முன்னாள் மூத்த பேராளிகளின் மற்றும் மக்களின் கருத்துக்களையும் புறந்தள்ளியதுடன் சில துயிலுமில்லங்கள் விடுவிப்பு என்பது மைத்திரியும் ரணிலும் தந்த வரம்போல காட்ட முற்பட்டனர்.அது வரமல்ல அது சாபம் ஏனெனில் உலகிலேயே மனித நாகரிமற்ற தனமாக  கல்லறைகறை உடைத்த மகிந்த ராஜபக்சவின் கொடுரமுகம் மக்கள் மனதில் மறைக்கப்படும் சாபமாக இருந்தது.அதேவளை தாயகத்தில் முக்கால்வாசித்துயிலுமில்லங்கள் இன்னமும் இராணுவத்தின் பிடியில்தான் உள்ளது என்ற சேதியையையும் விடுவிக்கபட்டதாகவும் மாவீரர் நாளை மக்கள் அனுட்டிக்க நல்லாட்சியில் வாய்ப்பு வந்ததாகவும் தம்பட்டம் அடிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேசத்துக்கு மறைத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது மீண்டும் 2015 செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் தமிழர் தரப்பு தாயத்திலும் புலத்திலும் இரண்டாக பிளந்த கதையை பார்ப்போம்.வேறொரு வகையில் சொல்லப்பபோனால்  சிங்கள ராஜதந்திரத்தின் வெற்றியை பார்ப்போம்.

தாயகத்திலும் புலத்திலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை இதற்கு காரணமான மகிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச விசாரணை கொண்டு வரவேண்டும் அதற்கு தமிழர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் எனவே கொண்டுவரபட்ட போர்க்குற்ற விசாரணையை நிராகரிக்கவேண்டும் என ஒரு தரப்பு கொள்கைப்பிடிவாதத்தில் நின்றது.முன்னதாக தமிழரசு மலர்ந்தது எனச்சொல்லப்பட்ட வடக்கு மாகாண சபையில் நீதி அரசர்  முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில்
முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்தவேண்டும்
எனவே தாயக மக்களின் கருத்துநிலையாக கருதக்கூடிய வடக்கு மாகாண சபை தீர்மானத்தையே புலத்திலும் நிலத்திலுமாக வலுயுறுத்தவேண்டுமென 2015ல் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரரங்கில் வாதாடியவர்கள்
யாரெனில் தாயகத்தில்

முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சுரேஸ்பிரேமச்சந்திரன்

அனந்திசசிதரன்

சிவாஜிலிங்கம்

செல்வராஜா கஜேந்திரகுமார்

சட்டத்தரணி சுகாஸ்

 சஜீவன்

 

மாணவ மீட்புப் பேரவை தலைவர் ,பொறியியலாளர் அகில இலங்கைக்குமான சமாதான நீதவான் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர். கலாநிதி எஸ். கணேஷ்.!

அருட்தந்தை இம்மானுவேல்  செபமாலை 

 

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என ஒன்று கூடிகலந்துரையாடல்   2015 செப்டம்பர் ஐநா சபையில்.

உள்ளிட்டவர்களும் மற்றும் மனித உரிமை தன்னார்வ அமைப்புக்களும்

புலத்தில் 2015ல் தமிழின படுகொலை தீர்மானத்தை வலியுறுத்தியவர்கள்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  அனைத்துலகம்

மக்கள் பேரவை பிரான்ஸ்

மக்கள் பேரவை பிரான்ஸ் திருச்சோதி

நாடு கடந்த தமிழீழ அரசு

சுவிஸ் ஈழத்தமிழரவை 

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

மூத்த ஊடவியலாளர் இளமாறன் கனடா

 

தமிழகத்தில் இருந்துவந்த

வை.கோபாலசாமியின் மதிமுக உறுப்பினர்கள்

மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி

இயக்குனர்  கௌதமன்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி இராமதாஸ்

இனப்படுகொலை தீர்மானத்தை புறக்கணித்து போர்க்குற்ற விசாரணையையும் உள்ளக விசாரணையாக மாற்றி அதையும் இனப்படுகொலை குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைக்க சம்மதித்த தமிழர்களின் பெரும் ஈகத்திலும் அர்ப்பணிப்பிலும் மண்ணள்ளிப்போட்டு தமிழர்களை நட்டாற்றில் விட்டவர்கள்………………………………………..

ஐநாவில் சிங்களத்தை காப்பாற்ற வந்த சிங்களம்

யாரெனில் மங்கள சமரவீரவின் வழி நடத்திலில் தாயகத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்ற

இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளான

சுமந்திரன்

மாவை.சேனாதிராசா

செல்வம் அடைக்கலநாதன்

சிவமோகன்

சாள்ஸ்

சரவணபவன்

சிறீநேசன்

கோடிஸ்வரன்

வியாழேந்திரன்

சாந்தி சிறீஸ்கந்தராசா

சிறீதரன் ஆகியோர்

புலத்தில் மங்கள சமரவீரவின் வழி நடத்தலில் இனப்படுகொலை தீர்மானத்தை புறக்கணித்து போர்க்குற்ற விசாரணையையும் உள்ளகவிசாரணையாக மாற்றி இனப்படுகொலை குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தவர்கள்

பிரித்தானிய தமிழர் பேரவைத் தலைவர் ரவி அவர்கள்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல்

கனடா அமைப்பைச்சேர்ந்த  வட அமெரிக்க தமிழ் அரசியல் 

சேலவை  புஸ்பராணி

பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் கிருபாகரன்

இதே வேளை இனப்படுகொலையை வலியுறுத்திய அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை ஒரு தரப்பாக சென்று சந்திக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களை அழைத்துச்செல்ல அதீத பிரயத்தனங்கள் மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை.அவர்கள் ரணிலின் நிரலில் பிடியாய் இருந்தார்கள்.இதில் சிறீதரன்
இனப்படுகொலை தீர்மானத்தை வலியுறுத்த வருவதாக புலம் பெயர் மனித உரிமை அமைப்புக்களுக்கு வாக்குறுதி அளித்திவிட்டு சந்திப்பு நாளில் செல்லாமல் ஏமாற்ற உள்ளக விசாரணைக்கு சம்மதிக்கும் தரப்புடன் மங்கள சமரவீரவின் வழித்தலில் கலந்துபோயிருந்தார்.
இவ்வாறுதான் முப்பது வருடம் அகிம்சை வழியிலும் முப்பது வருடம் ஆயுத வழியிலும் சொல்லணா துன்பம் அனுபவித்து பல இலட்சம் உயிர்களை கொடுத்து அகதி வாழ்வை சுமந்து இறுதியாய் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினத்தின் பெரும் பேரலவத்தால் அர்ப்பணிப்பால் கைக்கு எட்டிய சர்வேதேச சந்தர்ப்பம் இலங்கை அரசாங்கத்தோடு சோரம்போன தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் புலத்தில் தடம் மாறிய அமைப்புக்களாலும் 2015ல் கைநழுவவிடப்பட்டது.அதன் பிறகு தமிழர்களை அவர்களின் பிரநிதிகள் நம்பவைத்து கழுத்தறுத்த நல்லாட்சி நாயகனான மைத்திரி என்ன செய்திருக்கின்றார் என்பதை நாம்
சொல்லத்தேவையில்லை.இனப்படுகொலையாளியை  அரியாசனத்தில் ஏற்றி தன் முகத்தை தமிழர்களுக்கு காட்டியது மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பை சிங்கள அரசாங்கத்தோடு கரைய வைத்த சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.தற்பொழுது இந்த மாவீரர் நாளில் தமிழரின் நிலை என்னவெனில் ரணில் விக்கிர சிங்கவின் இரத்தக்கறைபடிந்த சிங்கள ஜனநாயகத்தை காப்பாற்றும் மக்கள் பிரதிநிதிகளை பெற்றெடுத்திருப்பதுதான்.

இனியாவது நல்லது செய்வீர்களா?

தாயகத்திலிருந்து இ .இளமாறன்

இந்த காணொளி உங்களுக்கு சாட்சியமாக உள்ளது

SHARE