இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் – பிரித்தானியா

72

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் பீல்டை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில் அதற்து முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் பதிவிட்டுள்ளார்.

SHARE