ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமயம்!

78

ஜனாதிபதி சட்டத்தரணியாக, இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் கொண்ட சட்டத்தரணி தவராசா, பல்வேறு மனித உரிமைகள் செயற்பாடுகள், 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியவர்களில் இவரும் ஒருவராவார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனம் பெற்றனர். இவர்களில் இரு தமிழர்களும் இரு முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE