உதயசூரியன் சின்னம் தூசிதட்டப்பட்டது எங்கிருந்து!மறைந்திருக்கும் உண்மைகளை போட்டுடைக்கின்றார்-மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன்

255

உள்ளுராட்சி சபை தேர்தலில் உதயசூரியன் சின்னம் தூசிதட்டப்பட்டது எங்கிருந்து!மறைந்திருக்கும் உண்மைகளை போட்டுடைக்கின்றார்-மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன்

கடந்த உள்ளுராட்சி சபைகள் தேர்தல்கள் முடிந்த ஒரு வருடத்தை எட்ட இருக்கும் நிலையின் அன்று உருவாக்கப்பட்ட கூட்டணிகள் தொடர்பில் மறைந்திருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் ஒரு தரப்பு தொடர்ந்து அதிருப்தி உற்றுவரும் நிலையில் தற்பொழுதும் மாற்று அணிகளுக்கான உருவாக்கங்களும் தேடல்களும் முனைப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் முனைப்புக்கள் இடம்பெற்றன.

அத்தகைய மாற்று அணிக்கான முனைப்புக்கள் சரியாக முறையில் கட்டமைக்கப்படாவிட்டால் தமிழ் மக்களின் பலம் சிதைந்துவிடும் ஆபத்தும் உண்டு.
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தி காரணமாக ஒரு மாற்று அணிக்கான முனைப்பாக தமிழர்களின் பழைய சின்னமான தற்பொழுது ஆனந்தசங்கரியிடம் சிக்கியுள்ள உதயசூரியனை மீட்டெடுத்து அதன் கீழ் தமிழர்களின் பலத்தை திரட்டுவதற்கான ஒரு நடவடிக்கை இந்தியாவின் சென்னையில் இருந்து மூத்த போராளிகள் மற்றும் மூத்த புத்திஜீவிகள் தரப்பால் முன்னெடுக்கப்பட்டது.

அந்த முன்னெடுப்;பின் வடிவமே உதயசூரியன் சின்னத்தின் கீழ் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கம் பெற்றது.அதில் ஈபிஆர்எல்எப் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளையும் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்தவர்களையும் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நிலத்துக்கும் புலத்துக்குமாக இடம்பெற்றிருந்தன.

ஆயினும் பின்னர் அது புரிந்துணர்வு அற்ற முரண்பாடுகள் காரணமாக முழுவடிவம் பெறாமல் சிதைந்து போயிற்று அத்தகையதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தமிழ் மக்களின் நலன்கருதி ஒரு அணியில் திரள்வது அவசியம்.இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை களைந்து தேசிய நலன் கருதி ஒன்றுபடுதல் காலத்தின் கட்டாயம் என மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் காணொளி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

SHARE