சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது: அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு

55

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக்கை தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்துள்ள பொதுமக்க ளும், வியாபாரிகளும் இத்திட்டத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். மாற்றுப் பொருட்களையும் ஆர்வத்தோடு பயன் படுத்த தொடங்கியுள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இது 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிரத்யேக இணையதளம், கைபேசி செயலி, விழிப்புணர்வு குறும்படங்கள், ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற இலச்சினை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட்டில் வெளி யிட்டார். பிளாஸ்டிக் தடைக்கான விளம்பர தூதராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டார்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட சங்கத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங் களை மாசு கட்டுப்பாடு வாரியம் நடத் தியது. அதில், பிளாஸ்டிக் தடை தொடர் பான சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றாக 12 வகை யான பொருட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி அனைத்து மாவட்டங்களிலும் உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளா கங்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கங்களுடன் கலந்தாய்வுக் கூட்டங் கள் நடத்தப்பட்டன. விழிப்புணர்வு மண்டல மாநாடுகள், பேரணிகளும் நடத்தப்பட்டன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருந்தால், அவற்றை ஒப்படைக்குமாறு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்தன. அதன்படி பல டன் பிளாஸ்டிக் குப்பை களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித் துள்ளன. சென்னை மாநகராட்சியில் கடந்த 31-ம் தேதி ஒரே நாளில் 1,883 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, தமிழகம் முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து காய்கறி சந்தைகள், சாலையோரக் கடைகள், பூக்கடைகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை வியாபாரிகள் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் ஆர்வத்துடன் துணிப்பை, பாத்திரங்களைக் கொண்டுவந்து காய்கறி, இறைச்சி ஆகியவற்றை வாங்கிச் சென்றனர். பாத்திரம் எடுத்து வராதவர்களுக்கு மந்தாரை இலையில் இறைச்சியை பொட்டலமாக கட்டி வழங்கி அரசின் திட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

பெரிய வணிக நிறுவனங்களில் |ரூ.14-க்கு துணிப்பைகள் விற்கப்பட் டன. பருப்பு போன்ற தானியங்களை இலவச காகித உறைகளில் வழங் கினர். சில நிறுவனங்களில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் ரூ.3 முதல் ரூ.8 வரை விற்கப்பட்டன.

பெரும்பாலான சாலையோர உண வகங்களில் பிளாஸ்டிக் தாளுக்கு மாற்றாக வாழை இலைகள் பயன்படுத் தப்பட்டன. பார்சல் கட்டுவதற்கும் வாழை இலை, மந்தாரை இலையைப் பயன்படுத்தினர். பொதுமக்கள் பலர் பாத்திரங்களைக் கொண்டுவந்து உணவு வகைகளை வாங்கிச் சென்ற னர். சாலையோர பழச்சாறு கடை களில் பிளாஸ்டிக் குவளைகளை தவிர்த்து, கண்ணாடி டம்ளர்களை பயன் படுத்தினர். பிளாஸ்டிக் பைகளில் பார்சல் கட்டித் தருவதையும் தவிர்த்து, பாத்திரம் எடுத்து வருமாறு அறிவுறுத்தினர்.

பெரிய உணவகங்களில் பாக்கு மட்டை தட்டு, மர ஸ்பூன்கள் பயன்படுத்தப்பட்டன. துணிப்பையில் வைத்து பார்சல் உணவுகளை வழங்கினர். பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருள் பயன்படுத்துவதில், உணவகங்கள் அதிக ஆர்வம் காட்டின.

பிளாஸ்டிக் பறிமுதல்மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை அமலாக்க குழுக்கள் பல இடங் களிலும் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து பல டன் அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டாஸ்மாக் பார்களில் பாக்கெட் குடிநீருக்கு பதிலாக பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் குவ ளைக்கு பதிலாக கண்ணாடி குவளை வழங்கப்பட்டது. இவற்றின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர் கள் வாங்கிச் சென்றனர். பார்களிலும் வாழை இலையில் உணவு வகைகள் வழங்கப்பட்டன.

அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் கின் பங்கு அதிகம் என்றாலும், பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக்கேடுகள் ஏற்படுவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே, மக்களிடமும், வணிகர்களிடமும் அதிக அளவில் வரவேற்பு இருந்தது. வெளியிடங்களுக்கு சென்றவர்களிடம் பரவலாக மஞ்சள் பை உள்ளிட்ட துணிப்பைகளை அதிக அளவில் காண முடிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாற்றுப் பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

SHARE