மாமனிதர் பிறைசூடி அவர்களின் இறுதி நிகழ்வு தமிழ்நாடு சென்னையில் நடைபெற்றது.

371

மாமனிதர் கனகசபை  பிறைசூடி அவர்களின் இறுதி நிகழ்வு தமிழ்நாடு சென்னையில் நடைபெற்றது.

தேசியத் தலைவரின் இனிய நண்பரும்,விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் வணிகக்கப்பலான Mv. சோழன் மற்றும் அமைப்பின் கப்பல்களின் பொறுப்பாளராகவும் விளங்கியவர் மாமனிதர்  பிறைசூடி அவர்கள். 02.01.2019 அன்று மாரடைப்பினால் மரணித்த அன்னாரின் இறுதிச் சடங்குகள் தமிழ்நாடு சென்னை பாலவாக்கத்தில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. சமயச் சடங்குகளில் அன்னாரது மகன்கள் மூவர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்விலும் இறுதி ஊர்வலத்திலும் ஐயா.பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் மூத்த கலைஞர் தேவர் அப்பா  திரு.வை.கோ, திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர் கௌதமன் உட்பட மற்றும் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஐயா.பழ.நெடுமாறன் அவர்களால்  தமிழீழ தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது

நண்பகல் பாலவாக்கத்தில் இருந்து புறப்பட்ட வாகன ஊர்தி பெசன்ட் நகரில் அமைந்துள்ள அரசினர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் மக்களின் அஞ்சலிக்குப் பின்பு அன்னாரது புகழுடம்பு மின்மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.

SHARE