ரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி!

128

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக்கடிதம் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் நிலுாக்கா ஏக்கநாயக்க அரசமரக்கூட்டுத்தாபனத்தின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ரெஜினோல்ட் குரே வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவர் அப்பதவியிலிருந்து விலகியிருந்தார்

SHARE