துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றவேண்டும். பாராளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிவிரல்காட்டிய மக்கள்

63
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள 24 ஆவது சிங்கரெஜிமன்ட் இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தை நிளஅளவீடு செயவதற்காக நிள அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் இன்று முயற்சித்துள்ளனார்.இதன்போது அந்தப்பகுதி பொதுமக்கள் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் நிலஅளவீடு செய்வதை நிறுத்துமாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.இதன்போது …
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் துயில்கின்ற எமது மாவீரச்செல்வங்களை நாங்கள் வணக்கம் செலுத்த இராணுவமுகாம் தடையாக உள்ளது இதனால் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டு மார்ச்ச மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசஅதிகாரிகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சந்தித்த பொதுமக்கள் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெயியேற்ற வேணடும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது பல 100 மாவீரர் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது
இந்நிலையில் 11 மாதங்களின் பின்னர் இன்று நிள அளவீடு திணைக்கள அதிகாரிகள் மாவீரர் துயிலுமில்ல காணிகளை நிளஅளவீடு செய்து இராணுவத்தினருக்கு சொந்தமாக வழங்க முயற்சித்துள்ளதாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE