வவுனியா நெடுங்கேணியில் ஒரு இலட்சம் ரூபாய் போலி தாள்கள் மீட்பு

95
வவுனியா நெடுங்கேணியில் ஒரு இலட்சம் ரூபாய் போலி தாள்கள் மீட்பு
வவுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
நேற்று இரவு நெடுங்கேணி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரினை சோதனை செய்துள்ளனர். இதன் போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபாய் தாள்கள் 18ம் 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் குறித்த நபரினை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE