அன்ரனோவை சுட்டு வீழ்த்திய போராளிகள் சின்னதிலகன் புலவன் ஆகியோருக்கு 185 ஆண்டுகள் சிறைத்தண்டனை

93

 

சிறீலங்கா வில்பத்து காட்டுப்பகுதியில் வைத்து ஏவுகளை மூலம் பலாலியில் இருந்து புறப்பட்டு போன சிறீலங்கா துருப்புக்காவி விமானமான அன்ரனோ 32ஐ 2000ம் ஆண்டு அல்லது அதற்கு அண்மைய நாளில் புலிகளில் விமான எதிர்ப்புபிரிவு சுட்டு வீழ்த்தினர்.இதில் ரஸ்ய விமான உட்பட 37 படையினர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த போராளிகளான புலவன் என்ற இராசதுரை ஜெகன் சின்னதிலகன் என்ற நல்லான் சிவலிங்கம் ஆகியோர் கடந்த எட்டு வருடங்கள் சிறீலங்கா சிறையில் 37 குற்றங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழங்கை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வீரமன் ஒரு குற்றத்திற்கு ஐந்து வருடங்கள் என்ற கணக்கில் தீர்ப்பளித்துள்ளார்.தண்டனை காலம் முழுவதும் ஐந்து வருடங்களில் ஒரே தடவையில் அனுபவிக்கவேண்டுமென அத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எட்டு ஆண்டுகள் புலன் சின்னதிலகன் இருவரும் சிறையில் கழித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE