போர்க்குற்றவாளி சவேந்திரசில்வா அவரது நியமனம் கண்டனத்துக்குரியது-கொதிக்கிறார் அனந்தி

168

 

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும்போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமான முக்கியமான படையணிகளில் ஒன்றான58வது படையணியின் கட்டளைத்தளபதி சவேந்திர சில்;வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா இராணுவ பிரதானி பதவி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது என காணாமல் ஆக்கச்செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர் எழிலனின் மனைவியும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான அனந்தி சசிதரன் யாழ் ஊடக மையத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்

இறுதி யுத்தத்தில் உணவுக்காக காத்து நின்ற குழந்தைகள் மீது பல் குழல் பீரங்கித்தாக்குதல் நடத்தியது.மற்றும் இறுதிப்போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்த்தர்கள் நடேசன் அண்ணன் உள்ளிட்டவர்களை காணாமல் ஆக்கச்செய்யப்பட்டதில் இந்த சவேந்திரசில்வாவுக்கு நேரடிப்பங்கு உண்டு.அதற்கான நேரடிச்சாட்சியங்களின் வாக்கு மூலங்களும் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.முன்பு வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்படக்கூடியவர் என கருதப்பட்ட இந்த குற்றவாளியான சவேந்திரசில்வாவுக்கு அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி பதவிகள் வழங்கியது.இப்போது மீண்டும் இராணுவ பிரதானி என்ற பதவி வழங்கி இராணுவத்தினரை எவரும் எதுவும் செய்யமுடியாது என்ற பாணியில் காப்பாற்ற விளைகின்றனர்.நாம் இந்த குற்றவாளிக்கு எதிராக வழக்கும் ஏற்கனவே தொடுத்துள்ளோம். எனவே இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட நபரின் பதவி தொடர்பில் ஜனாதிபதி பரிசீலனை செய்யவேண்டும்.ஏற்கனவே போரை வழிநடத்திய சரத்பொன்சேகாவுக்கு பீல்ட்மார்சல் பதவியும் அமைச்சுப்பதவிகளும் இந்த அரசாங்கங்கள் வழங்கி காப்பாற்றி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது எனவும் அனந்தி தெரிவித்தார்.

 

SHARE