தமிழர் தலைநகர் திருகோணமலை: 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்!!

117

திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தை இந்தியா நாட்டிற்கு சிறிலாங்கா அரசு விற்பனைசெய்ய இனங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக  சீனக்குடா துறைமுகத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பதிலாளித்துள்ளார்.

SHARE