வவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு

51
வவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா  நிகழ்வு
வவுனியா பிரதேச கலாசார பேரவையும் , வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா பிரதேசசெயலக கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
கலாபூசணம் திருமதி.தேவிமனோகரி நாகேஸ்வரன் அவர்களின் நினைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில்  கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர்  மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

SHARE