ஐ நா தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிறீலங்கா தோல்வி-உலகத்தமிழர் பேரவை

60

இலங்கையின் புதிய இராணுவ பிரதானியின் நியமனம்இ ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலகத் தமிழர் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ ‘இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தமிழ் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்இ இத்தகைய நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிக்கப்பட வேண்டும்.

அதுமாத்திரமின்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை உண்மையாக நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது என்பதனை இந்நியமனம் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE