உலோகங்கள் கடத்தும் கடற்படையினரின் புதிய திட்டம் அம்பலம்!

95

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடமைகளை வட்டுவாகல் கடற்படையினர்  இடம் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உடமைகளுடன் உலோகப் பொருட்களும் இன்றைய தினம் முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை முகாமில் இருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு இறுதியுத்ததின் போது இலங்கை முப்படையினரின் கொடூரத் தாக்குதல்களினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.பொதுமக்களின் உடமைகளும் அழிக்கப்பட்டது.

இவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடமைகளை இன்று மாலை கடற்படையினர் இடம் மாற்றியுள்ளதுடன் பெறுமதியாக உலோகப் பொருட்களும் கடத்தப்பட்டுள்ளது.

SHARE