குறுதிச்சோகை நோயினால் சிறுவர்கள் பாதிப்பு.

91

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதியில் இரத்தசோகை நோயினால் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்பகின்றது.

யாழ் திருமன்டலம் தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வுமைய ஏற்ப்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இலவ மருத்துவ சேவை நடைபெற்றுள்ளது.

வளைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால், பகுதியில் வசிக்கும் 100காணக்காண பொதுமக்கள் இந்த மருத்துவ சேவையில் பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இலவச மருத்துவ சேவை இயக்குனர் தயா தியாகராஜா (வைத்தியர்) கருத்து தெரிவிக்கையில்..

யாழ் திருமன்டலம் தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் ஏற்ப்பாட்டில் உளவளதுனை, பெண்கள் மேம்பாடு, சிறுவர் பணிகள் மற்றும் இலவச மருத்துவ சேவைகள் என்பன வழங்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலவமருத்துவ சேவை இன்று காலை தொடக்கம் பிற்பகல்வரை நடைபெற்றுள்ளது.

இதன்போது பல்வேறுபட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறிப்பாக அதிகளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட நோயாளர்கள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் இரத்தசோகை நோய் ஏற்படுவதற்கு குறுதிப்பெறுக்கு மற்றும் குறைவான சிவப்பு அனுக்களின் உற்பத்தி போன்ற காராணங்களினாலே ஆகும்.

இதனால் இரத்தே சோகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டோர் இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் அவசியம் என்று தெரிவித்தார்.

SHARE