கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகிறார்

76

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் ஒன்றை விரைவாக எதிர்கொள்ளக்கூடிய சூழல் இருப்பதால் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர் பற்றி ஆரூடங்கள் தெரிவித்து வரும் நிலையில் சபாநாயகர் கருஜயசூரியை ஐக்கிய தேசியக் கட்சி தலைமை களமிறக்க விருப்பம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரை வேட்பாளராக நிறுத்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழித்து பிரதமருக்கு அதிகாரங்களை வழங்க அவருடன் கருத்து பரிமாறல்கள் இடம்பெறுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற சூழ்நிலையில் சபாநாயகர் கருஜயசூரிய நடந்து கொண்ட பக்கசார்பற்றதான நடைமுறைகள் மூலம் நாட்டு மக்களிடம் நற்பெயருடன் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி கருதுவதாக அறியக்கிடைக்கின்றது.

SHARE