ஈழத்தின் முன்னணி கூத்துக்கலைஞர் கணேஸ் மறைந்தார்.

499

 

முல்லைத்தீவு முள்ளியவளை 3, ம் வட்டாரத்தை பிறப்பிடமாக பிறப்பிடமாக கொண்டவரும் தற் பொழுது ஒட்டு சுட்டான் அலைக்கரையையை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் என்ற கணேசலிங்கம் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்.ஈழத்தின் நாட்டுக்கூத்து வரலாற்றில் முல்லைமோடி நாட்டுக்கூத்துக்கு தனி வரலாறும் வாசமும் உண்டு அத்தகைய ஈழக்கூத்து வடிவத்தில் தன் ஆற்றலை கொடுத்த இக்கலைஞரை போற்றுவதுடன் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்வோம்.மேற்கத்தைய கலை வடிவங்களில் பாரம்பரிய கலைவடிங்களை கொண்ட இனங்களுக்கு காணப்படும் மோகம் காரணமாக இன்று கூத்து கலை வடிவங்கள் அழிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.அத்தகைய அழிந்து வரும் இனங்களின் அடையாளமான கூத்துக்கலையில் தன் வாழ்நாட்களை கொடுத்த கணேசலிங்கம் போன்ற ஈழக்கலைஞர்கள் போற்றுதற்கு உரியவர்கள்.இவர் மூத்த தளபதி மேஜர் பசீலனின் சகோதரர் என்பதும் இறுதி போரில் ஒரு காலை இழந்தவர்     இங்கு குறிப்பிடத்தக்கது.

 

SHARE