பெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது!

125

இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை முதலை கடித்துக் கொன்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த விஞ்ஞானி 44 வயதுடைய டெசி துவோ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் இந்தோனேசியாவின் சுலவேசி என்ற தீவைச் சேர்ந்தவர். அத்தீவில் அமைந்துள்ள மினாஹசா என்ற இடத்தில் சொந்தமாக ஆய்வுகூடத்தை வைத்துள்ளார். அங்கு ஆராய்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அதற்கு மேரி என்று பெயரிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்றுள்ளது.

இதுகுறித்து தொியவருகையில்:

விஞ்ஞானி முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்து தின்று விட்டது. இதனால் தண்ணீரில் விழுந்த அவரது வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டதாக தெரிவித்தனர்.

குறித்த முதலை 14 அடி நீளமுடையது. அதை பெண் விஞ்ஞானி எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வளர்த்து வந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE