தமிழீழத்தை கைவிடவில்லை சுமந்திரனுக்கு காட்டமான பதிலுரைக்கும்-கஜன்

803

தமிழீழத்தை கைவிடவில்லை சுமந்திரனுக்கு காட்டமான பதிலுரைக்கும்-கஜன்

தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் தனிநாட்டுக்கோரிக்கையை தமிழர்கள் கைவிட்டுவிட்டதாகவும் தமிழர்களை அதை கோரவில்லை என்றும் கூறியுள்ள நிலையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் சுமந்திரனின் இத்தகைய கூற்றுக்களுக்கு காட்டமான தொனியில் பதிலளித்துள்ளார்.
கொழும்பு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டவரும் போராட்ட காலத்தில் தாயகத்தில் குண்டுமழை அனுபவங்களை அர்ப்பணிப்பு அனுபவங்களை பெறாதவருமான சுமந்திரனுக்கு தமிழீழம் தனிநாடு என்பதன் அர்த்தமும் அதற்காக கொஞ்சமாக கொஞ்சமாக முப்பது நாற்பது ஆண்டுகள் வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி உயிர்களை எண்ணற்ற அர்ப்பணித்து அகதி வாழ்வு சுமந்து பட்டிணி கிடந்து தியாகம் செய்த மனிதர்களின் புனிதமும் தாகமும் தெரியாது.அவர் அதை உணர்ந்தவர் இல்லை.தனிநாடு தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று தமிழர்கள் சார்பில் சொல்வதற்கு சுமந்திரனுக்கு உரிமை கிடையாது.தமிழீழத்தை கோரிய புலிகளும் இல்லை எவரும் இல்லை தன்னை எவரும் கேட்கமுடியாது என்ற இறுமாப்பிலும் எதேச்சதிகாரமான போக்கிலும் வாயில் வந்ததை எல்லாம் சுமந்திரன் சொல்ல முனைகின்றார்.அவரை கேட்பதற்கு ஒருவன் வருவான் என்பதை அவர் மறக்கக்கூடாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் தனிநாட்டுக்கோரிக்கையை நாம் கோரவில்லை என யாராவது சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என கூறியிருக்கும் சுமந்திரன் புலிகளை சாடுவதுடன் தமிழர்கள் தனது கருத்தை எதிர்த்து கருத்துச்சொல்லாதிருக்கும்போது தமிழீழக் கோரிக்கையை தமிழர்கள் கைவிட்டதாக பொருள்படும் எனும் அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.சுமந்திரனுக்கு சவால்விடுகின்றேன்.நீங்கள் எந்தவித பொலிஸ் பாதுகாப்பு இராணுவ பாதுகாப்பு புலனாய்வாளர்கள் இல்லாது வடக்குகிழக்கில் உள்ள மக்கள் மத்தியில்போய் தமிழீழ கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் கைவிட்டுவிட்டார்கள் என சொல்லிப்பாருங்கள் அப்போது மக்கள் உங்களுக்கு என்ன பதில் தருவார்கள் என்பது புரியும் எனத்தெரிவித்துள்ள கஜன் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்கள் அமைப்புக்கள் தமிழினப்படுகொலை என்ற விடயத்தை மிக ஆணித்தரமாக வலியுறுத்தக்காரணம் இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு இனம் தனியான தேசம் ஒன்றை அமைக்க தகுதியான சர்வதேச அனுசரணையை பெறும் என்பதால்தான்.ஆனால் தமிழரசு கட்சி உள்ளிட்ட தமிழ்; தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளகவிசாரணையாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து தமிழர்களின் அபிலாசையை குழிதோண்டிப்புதைக்க முனைந்துள்ளது தவிர தமிழ் மக்கள் ஒருபோதும் தனி நாட்டு அபிலாசையை கைவிடவில்லை என்பதை சுமந்திரன் போன்றவர்கள் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE