மூத்த போராளி சேரனுக்கு புனிதபூமியின் வீரவணக்கம்

344

 

தாயகவிடுதலைப்போராட்டத்தில் தனது ஆழமான பணிகளை மேற்கொண்ட முன்னாள் போராளி பசுபதி தருமராசா என்ற சேரன் சுகயீனம் காரணமாக பிரித்தானியாவில் சாவடைந்துள்ளார்.போராட்ட காலத்தில் விடுதலையை முன் கொண்டு செல்வதற்கான முக்கிய பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட சேரன் பின்பு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த நிலையில் உயிர்நீத்துள்ளார்.
தாயகவிடுலைப்போராட்டத்தின் பல களமுனைகளில் வேவு போராளியாகவும் வெற்றிகரமான தாக்குதல்களுக்கு அத்திபாரமாக இருந்தவர்.தாயகத்துக்குள்ளும் வெளியிலும் முக்கிய வெற்றித்தாக்குதல்களில் போராளி சேரனின் பங்கு மகத்தானது. போராளி சேரன் படையினரிடம் அகப்படக்கூடிய சந்தர்ப்பமொன்றில் சயனைட் அருந்திய நிலையில் படையினரால் மீட்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு 2002ம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தில் ஒப்படைக்கப்பட்டவர்களில் ஒருவர். விழுப்புண்கள் பலதை சுமந்த சேரனுக்கு புனித பூமி இணையக்குழுமம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றது.யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி இரணைமடு பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE