திருமணம் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம்பத்திய ஆசையைப் பூர்த்தி செய்யவில்லையென மனைவியிடம் விவாகரத்து கோர முடியாது- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

53

ஈரோடு மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவந்த நபருக்கும், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1997-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 1999-ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது உடல் ரீதியிலான ஆசையை மனைவி பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கணவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மனைவி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘கணவரின் தாம்பத்திய ஆசையை பூர்த்தி செய்ததால்தான் எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவருக்கும், அவருடைய அத்தை மகளுக்குமிடையே தவறான தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக என்னிடம் விவாகரத்து கோருகிறார். எனவே எனது கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது. மேலும் எனக்கும், எனது மகளுக்கும் மாதம் ரூ. 30 ஆயிரத்தை ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு குடும்ப நல நீதிமன்றம், ‘மனைவி மற்றும் மகளின் பராமரிப்புக்காக கணவர் மாதந்தோறும் ரூ. 7,500-ஐ ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டு, கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, ‘மனுதார ரான கணவர் 16 ஆண்டுகள் கழித்து தனது மனைவி தாம்பத்திய ஆசையை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி விவாகரத்து வழக்கை தொடர்ந் துள்ளார்.

இது ஏற்புடைய தல்ல. வயது, உடல்நிலை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் குடும்பத்தின் கூடுதல் சுமை மனைவி மீது விழும் சூழலில், இல்லற வாழ்வில் ஒத்துழைக்க மறுக்கிறார் எனக்கூறி எளிதாக ஒதுக்கிவிட முடியாது. இது குடும்பச் சூழ்நிலை மற்றும் வழக்கின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் ஏற் கெனவே பல்வேறு தீர்ப்புகள் உறுதிசெய்துள்ளன. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியான உத்தரவைதான் பிறப்பித்துள்ளது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

SHARE