பாலச்சந்திரன் புலிகள் இயக்கப் போராளியாம்-இந்தியாவில் மகிந்த சொன்ன கதை

517

 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதிலில் இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் தொடர்பில் வெளிவந்த காணொளிகள் போலியானவை என தெரிவித்துள்ளார்.அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரனை ஒரு விடுதலைப்புலிப் போராளி என்றும் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்கள் இருந்தனர் என்றும் மகிந்தராஜபக்ச கூறியுள்ளார்.

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் போன்றோரின் படுகொலைகளுக்கும் தமது இராணுவத்துக்;கும் எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ள அவர் சிவில் அமைப்புக்கள் சிலவும் சர்வதேச அமைப்புக்கள் சிலவும் தம்மீது குற்றம் சுமத்துவது நியாயமானதா அப்படுகொலைகளுக்கு புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மகிந்தராஜபக்ச அண்மையில் சிறீலங்காவில் வழங்கிய செவ்வியொன்றில் இராணுவம் சில போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என ஒப்புக்கொண்ட நிலையில் தற்பொழுது இந்தியாவில் முன்னுக்கு பின்னானதும் நம்பகமற்றதுமான கருத்துக்களை கூறமுனைவதில் இருந்து அவருடைய போக்குகள் தமிழருக்கு இன்னமும் தீவிரமான விரோதமுடையதாகவே காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE