மூன்றாவது டெஸ்ட் போட்டி – 154 ஓட்டங்களுக்குள் விண்டிஸ் அணி சுருண்டது!

73

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 19 ஓட்டங்களை பெற்று 142 ஓட்டங்கள் முன்னிலையுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதற்கு முன்னர் தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தடிாய விண்டிஸ் அணி 154 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

அவ்வணி சார்பில் ஜோன் காம்ப்பெல் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மார்க் வூட் 5, மெயின் அலி 4, ஸ்டூவர்ட் பிரோட் ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதற்கு முன்னர் முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தடிாய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்களையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களையும், பென் ஸ்டொக்ஸ் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில், கெமர் ரோச் 4 விக்கட்டுக்களையும் கீமோ போல், ஷானோன் கேப்ரியல், அல்ஜார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இப்போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

SHARE