பிரான்ஸின் 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

68

பிரான்ஸின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள காலநிலை தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இல்-து-பிரான்ஸ் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்றைய தினம்(திங்கட்கிழமை) செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து புறப்படும் புயல் பிரான்ஸை கடந்து ஐரோப்பிய கண்டத்தின் தீவுகளை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இல்-து-பிரான்சுக்குள் மணிக்கு 80 கி.மீ வேகம் வரை புயல் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

SHARE