சிறீலங்கா தொடர்பில் ஐ.நாவில் ஐந்து நாடுகளால் புதிய பிரேரணை

76

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் சிறீலங்கா தொடர்பில் இம்முறை பிரித்தானியா மொன்றினீக்ரோ கனடா ஜேர்மனி மெசடோனியா ஆகிய நாடுகள் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மறுசீரமைப்பு பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் விரிவாக்கம் என்பன தொடர்பில் இந்த பிரேரணை சிறீலங்காவை வலியுறுத்தும் என கூறப்படுகின்றது.

இதற்கு சகல உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளதுடன் 2015ல் மனித உரிமை சபையில் சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அமுலாக்கத்துக்கு பிரித்தானியா சகல தரப்புடன் சேர்ந்து ஒத்துழைக்கும் இது தொடர்பில் பிரித்தானிய பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.

SHARE