காவல் துறையை தாக்கிய சிறீலங்கா எம் பியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி

66

 

ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்தசிறீ.இவர் அண்மையில் பதுளை நகர சுற்றுவட்ட பகுதியில் பயணித்த மகிழுந்துக்கும் சமிந்தசிறீக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையில் அப்பகுதி போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரி தாக்குலுக்கு உள்ளானார்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சமிந்தசிறீயின் சாரதி நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமிந்தசிறீயை கைது செய்ய சபாநாயகரின் அனுமதியை காவல்துறை கோரியிருந்த நிலையில் தற்பொழுது அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

SHARE