சொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு?

43

 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா தண்டனைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே விடுதலையாவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பான அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையில் இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன.

இந்நிலையில் கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்டகால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலம் சிறைத்தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

இதேவேளை இவ்வாறு சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடமுண்டு.

இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து அடுத்த ஆண்டு முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE