72பேருடன் பிரான்ஸ் ரியூனியன தீவை நெருங்கியுள்ள சிறீலங்கா கப்பல்

68

 

சிறீலங்காவின் நீர் கொழும்பில் கடந்த ஒன்பதாம் திகதி புறப்பட்டதாக சொல்லப்படும் கப்பல் ஒன்று பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக்கப்பலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 72பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேற்படி கப்பல் நீர்கொழும்பைச் சேர்ந்த சுதர்சன் பெரேரா என்பவருக்கு சொந்தமான மீன்பிடிக்கப்பல் என்றும் அதன் ஓட்டியான பெர்ணார்டோ சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றவர் என்றும் 72பேரையும் கொண்டு சென்று இறக்குவதற்கு பல இலட்சங்களை அவர் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கப்பல் உரிமையாளர் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE