முருகனுக்கு ஆதரவாக நளினியும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபடுகின்றார்

50

 

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில்வாடும் ஏழுபேரை தமிழக ஆளுனர் பன்வரிலால் புரோகித் முடிவெடுப்பதன் மூலம் விடுதலை செய்யலாம் என அண்மையில் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனினும் ஆளுனர் தன்னுடைய முடிவை அறிவிப்பது தாமதமடைந்து வருவதால் ஆளுனர் முடிவை அறிவிப்பதை விரைபடுத்தக்கோரி சிறையில் முருகன் கடந்த 2ம் திகதி தொடக்கம் உணவு தவிர்பை மேற்கொண்டு வரும் நிலையில் தற்பொழுது மனைவியான நளினியும் சிறையில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

SHARE