அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு தீர்வு வழங்கும் அமைச்சரவை பத்திரம் தாக்கல்

57

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையிலான் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது.

அதன்படி குறித்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கமைய இன்றைய தினம் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE