பழைய பேருந்து நிலைய பொது மலசலகூட பாதை 20 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு

78
பழைய பேருந்து நிலைய பொது மலசலகூட பாதை 20 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் ஊடாக பொது மலசலகூடத்திற்குச் செல்லும் பிரதான பழைய பேருந்து நிலைய கடைத் தொகுதியூடாகச் செல்லும் பாதை கடந்த இரண்டு வருடங்களாக மேல் பகுதியிலிருந்து சீமெந்து துண்டுகள் உடைந்து வீழ்ந்து வருகின்றமையால் நகரசபை தொழிநுட்பவியலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பூட்டப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது அப்பாதை சீரமைப்புப்பணிகளுக்காக கடந்த வருடம் 2018ஆம் ஆண்டின் நகரசபை நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளதுடன் பாதை புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றதாக நகரசபை உப நகர பிதா சு. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இன்று  குறித்த பகுதிக்குச் சென்று களப்பணிகளை மேற்பார்வை மேற்கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது, பொது மலசல கூடத்திற்குச் செல்லும்போது மேல்பகுதியிலிருந்து சிறியளவிலான சீமெந்து துண்டுகள் உடைந்து தலையில் வீழ்ந்து வருவதாக வியாபார நிலைய உரிமையாளர்களினாலும், வர்த்தகர் சங்கத்தினாலும் நகரபைக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இதனைத்திருத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்தது. நிதிகள் ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தினால் சீரமைப்புப்பணிகள் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நகரசபையின் கடந்த ஆண்டு நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழுவேகத்துடன் தற்போது இடம்பெற்று வருகின்றது. இம்மாதம் இறுதிப்பகுதியில் பொது மலசலகூடத்திற்காக பொதுப்பாதை சீரமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுவிடும். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்பட இப்பகுதியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE