யாழ்ப்பாண நீர் செயற்றிட்டம் உள்ளிட்ட தண்ணீர் தொடர்பிலான விடயங்கள் மைத்திரி தலைமையில் ஆராய்வு

34

 

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன் போதே ஜனாதிபதி இவற்றை கூறினார்இ ‘விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட வடக்கு மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படின் வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிதண்ணீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய கால்வாய்த்திட்டம்இ நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ‘யாழ்ப்பாணத்திற்கு நீர்’ செயற்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘எல்லங்கா’ குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும்’ இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த கலந்துரையாடலில் மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அவ் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்கஇ வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SHARE