தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா. தவறிவிட்டது: அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு

155

தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் விடயத்தில் ஐ.நா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமை பேரவையில் நீதியைப் பெற்றுக் கொள்ள, தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்து முழுமையான பங்களிப்பை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SHARE