வயலிற்கு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்.

587
வயலிற்கு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்.
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீடகப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மதியம் 2 மணியளவில்  வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை வயல் பகுதியில் சடலமாக கண்டுள்ளனர். ஆறுமுகத்தான் புதுக்குளத்தை சேர்ந்த  நல்லையா இராசேந்திரம் (வயது-44) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டவராவார்.
ஓமந்தை பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE