235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்க அணி

107

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டர்பனில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. டீன் எல்கர் 0, மார்க் ராம் 11, ஹசிம் ஆம்லா 3 ரன்களில் நடையை கட்டினர். சற்று நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 35, டெம்பா பவுமா 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து பிலாண்டர் 4 ரன்களில் வெளியேறினார். விக்கெட் சரிவுக்கு இடையே குயிண்டன் டி காக் பின்கள வீரர்களுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேசவ் மகாராஜ் 29, ரபாடா 3, ஸ்டெயின் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக குயிண்டன் டி காக் 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் 59.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4, ரஜிதா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது.

SHARE